Suzhalum Chakkaram Lyrics in TAMIL

சுழலும் சக்கரம் ஒரு கையில்


சுழலும் சக்கரம் ஒரு கையில்
தினம் ஒலிக்கும் சங்கோ மறு கையில்
குழலும் யாழும் இசைப்பது ஓ
கோவிந்தா என்னும் நாம மதை
கோவிந்தா ஹரி கோவிந்தா
நாராயண குரு கோவிந்தா

கோபுரம் போல் ஒரு கிரீடமதில்
மின்னும் பவழம் ரத்தினமே
சாகர சயனல் சுந்தர வதனன்
வைகுண்ட லோகத்துத் தாரகையே
கோவிந்தா ஹரி கோவிந்தா
நாராயண குரு கோவிந்தா

சாற்றிய திருமண் மேல் நோக்கும்
சாரதி அழகை சரி பார்க்கும்
காற்றில் களையும் திருமுடி அழகை
கீற்றாய் தாங்கி தினம் காக்கும்

சுழலும் சக்கரம் ஒரு கையில்
தினம் ஒலிக்கும் சங்கோ மறு கையில்
குழலும் யாழும் இசைப்பது ஓ
கோவிந்தா என்னும் நாம மதை
கோவிந்தா ஹரி கோவிந்தா
நாராயண குரு கோவிந்தா

நயனம் இரண்டும் தங்க தாமரை
நடனம் அதிலே தர்ம தேவதை
புவனம் ஏழும் மயங்கும் வண்ணம்
புன்னகை பூக்கும் மாதவன் வதனம்
கோவிந்தா ஹரி கோவிந்தா
நாராயண குரு கோவிந்தா

தோளில் தவழும் புண்ணிய துளசி
மாலைகள் உடனே மாலவன் காட்சி
சாளக்ராமம் மின்னிடும் ஹாரம்
சஹஸ்ரநாமம் நீக்கிடும் பாரம்

சுழலும் சக்கரம் ஒரு கையில்
தினம் ஒலிக்கும் சங்கோ மறு கையில்
குழலும் யாழும் இசைப்பது ஓ
கோவிந்தா என்னும் நாம மதை
கோவிந்தா ஹரி கோவிந்தா
நாராயண குரு கோவிந்தா

திருவடி நோக்கி ஒரு கரம் காட்டும்
அபயம் காட்டி மறு கரம் ஜொலிக்கும்
சரணாகதியின் தத்துவம் சொல்லும்
திருநாரணனின் அருளே வெல்லும்
கோவிந்தா ஹரி கோவிந்தா
நாராயண குரு கோவிந்தா

புஷ்பங்கள் தழுவும் புண்ணிய திருவடி
பிறவா வரத்தை அருளும் திருவடி
அண்ணல் திருவடி துகலாய்ப் பிறக்க
அடியவர் வணங்கும் அனந்தன் திருவடி

சுழலும் சக்கரம் ஒரு கையில்
தினம் ஒலிக்கும் சங்கோ மறு கையில்
குழலும் யாழும் இசைப்பது ஓ
கோவிந்தா என்னும் நாம மதை
கோவிந்தா ஹரி கோவிந்தா
நாராயண குரு கோவிந்தா

https://youtu.be/BiiSg-HvchA

Comments

  1. மிகவும் அருமை. சங்கல்பம் செய்து கொண்டு இந்த பாடலைப் பாடினால் சங்கல்பம் பூர்த்தியாகும்.

    ReplyDelete
  2. மிகவும் அழகான பாடல்.என் மனதை மாலவனின் திருவடியில் கட்டிப்போட்டது.
    கோவிந்தா....ஹரி கோவிந்தா....🙏

    ReplyDelete
  3. Govinda Govinda Tirupati samy arputham niraintha god

    ReplyDelete
  4. திவ்யமான பாடல். இப்பாடலை இயற்றியவர் யார்?

    ReplyDelete
  5. Lucky Club Casino Site: Review & Bonus | LuckyClub
    Lucky Club Casino Review. Check the review of the site for more information. It covers the luckyclub casino games offered, payment methods and limits,

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Adi Meethu Adi Vaithu Song Lyrics in TAMIL